விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் அஜித் மனைவியின் தங்கை

லிங்கா’ படத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் ‘நான் ஈ’ வில்லன் சுதீப்பை வைத்து புதிய கன்னட படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். சுதீப் தற்போது ‘புலி’ படத்தின் விஜய்-க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை முடித்தபிறகு கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் கே.எஸ்-ரவிக்குமார் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம்? என்று நீண்ட நாட்களாக நாயகி தேடுதல் வேட்டை நடத்தி வந்தார் கே.எஸ்.ரவிக்குமார். இந்நிலையில், தற்போது அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கையான பேபி ஷாமிலியை இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

பேபி ஷாமிலி, தமிழில் ‘அஞ்சலி’, ‘துர்கா’, ‘சின்னக் கண்ணம்மா’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தெலுங்கில், ஓய் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.ரவிக்குமார்-சுதீப் இணையும் புதிய படத்திற்கும் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *