அஜித் படத்துக்கு தீம் மியூசிக் ரெடி

அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கின்றனர்.

இந்நிலையில், அஜித் பிறந்தநாளான நேற்று பல்வேறு சினிமா நட்சத்திரங்களும், அவரது ரசிகர்கள் பலரும் சமூக இணையதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அஜித்தின் 56-வது படத்திற்கு இசையமைக்கும் அனிருத்தும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், கூடுதலாக சந்தோஷமான இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்துள்ளார். அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் இயக்கும் படத்தின் தீம் மியூசிக் தயாரான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அஜித்துக்கான அறிமுக பாடலும் ரெடியாகவிட்டதாம்.

‘பில்லா‘ முதல் ‘வீரம்’ வரை அஜித்தின் படங்களில் தீம் மியூசிக் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த படத்திலும் அனைவரையும் கவரும் வண்ணம் தீம் மியூசிக்கை அனிருத் அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *