புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி’. இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியிருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா நடித்திருக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் டீசர் விஜய் பிறந்த நாள் அன்று வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் பாடல்களை பெரிய விழாவாக எடுத்து வெளியிட்டனர். இதுவும் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வரும் நிலையில், இப்படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிட இருக்கின்றனர்.

இப்படத்தில் ராணியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவிக்கு இன்று பிறந்தநாள். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஸ்ரீதேவிக்கு வாழ்த்துக்களை கூறி, டிரைலர் வெளியிடும் தேதியையும் அறிவித்திருக்கின்றனர்.

‘புலி’ படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.