தனி ஒருவன் படத்தின் பாடல்கள் ஜூலை 15ம் தேதி ரிலீஸ்

தனி ஒருவன் படத்தின் பாடல்கள் ஜூலை 15ம் தேதி ரிலீஸ்

ரோமியோ ஜூலியட் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி தற்போது நடித்துள்ள படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆதி இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை ஜூலை 15ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

ஜெயம் ரவி மற்றும் ராஜா கூட்டணியில் ‘ஜெயம்’, ‘எம்.குமரன்’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’ ஆகிய படங்கள் வெற்றியடைந்தது. அந்த வரிசையில் ‘தனி ஒருவன்’ படமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.