இஞ்சி இடுப்பழகி இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

இஞ்சி இடுப்பழகி இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு ஆர்யா- அனுஷ்கா இணைந்து நடித்து வரும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்தை கே.எஸ். பிரகாஷ் இயக்கி வருகிறார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மரகதமணி இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்னும் பெயரில் உருவாகிறது.

இப்படம் எடை குறைப்பு பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது. இதில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடி நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து முதலில் இப்படத்தை அக்டோபர் 1-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தனர். பின்னர் அக்டோபர் 9 என்று அறிவித்தனர். தற்போது இறுதியாக நவம்பர் 27-ம் தேதி வெளியாகும் என்று உறுதியாக கூறியிருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீ தேதியையும் அறிவித்திருக்கின்றனர்.

தமிழில் அக்டோபர் 9-ம் தேதியும், தெலுங்கில் நவம்பர் 1-ம் தேதியும் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.