சேலை மூக்குத்தி என மராத்தி பெண்ணாகவே மாறிய சுருதிஹாசன் | The Marathi-girl-turned nose sari shurithihassan

சுருதிஹாசன் ‘கப்பார் இஸ் பேக்’ என்ற இந்தி படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சுருதிஹாசன் மராத்தி பெண் கேரக்டரில் வருகிறார். இதற்காக பாரம்பரிய சேலை மற்றும் மூக்குத்தி அணிந்து மராத்திய பெண்ணாகவே மாறி இருக்கிறார்.

அவரது மராத்தி பெண் கேரக்டர் பட ஸ்டில்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு மேலும் இந்திப்பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கிறார்.

சுருதிஹாசன் தமிழில் விஜய் ஜோடியாக ‘புலி’ படத்தில் நடிக்கிறார். ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்க உள்ளார். தெலுங்கில் ஒரு படம் கைவசம் உள்ளது. இந்தியிலும் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக இருக்கிறார். கார்த்தி படத்தில் நடிக்க மறுத்ததால் கோர்ட்டு வழக்குகளில் சிக்கினார். தற்போது படஅதிபருடன் சமரசம் ஏற்பட்டு வழக்கு வாபஸ் ஆகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *