கிராமத்தை தத்தெடுத்த மகேஷ்பாபு

கிராமத்தை தத்தெடுத்த மகேஷ்பாபு

நடிகர் மகேஷ்பாபு – சுருதி ஹாசன் நடித்த தெலுங்கு படம் ஸ்ரீமாந்துடு (செல்வந்தன்) ஆந்திரா– தெலுங்கானாவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. தாங்கள் பிறந்த கிராமத்தை தத்து எடுப்பதே இந்த படத்தின் கதை ஆகும்.

இந்த படத்தை பார்த்த தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் மகன் தாராக ராமராவ் மகேஷ்பாபுவை பாராட்டினார்.

தெலுங்கானா மாநில அரசு செயல்படுத்தி வரும் ‘‘கிராம ஜோதி’’ திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில் படம் அமைந்து இருப்பதாக அவர் கூறினார்.

அதோடு மிகவும் பின் தங்கியுள்ள மெகபூப் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை நீங்கள் தத்து எடுக்க வேண்டும் என்றும் அவர் மகேஷ்பாபுவை கேட்டுக் கொண்டார்.

இதனை மகேஷ்பாபு ஏற்றுக் கொண்டார். நீங்களே ஒரு கிராமத்தை சொல்லுங்கள். அதனை நான் தத்து எடுத்துக் கொள்கிறேன். என்று ராமராவிடம் அவர் கேட்டுக் கொண்டார். ராமராவ் யோசனைப்படி பாலமோர் கிராமத்தை தத்து எடுத்தார்.

விரைவில் அந்த கிராமத்துக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைப்பேன் என்று மகேஷ்பாபு கூறினார்.

மேலும் தனது தந்தை (நடிகர் கிருஷ்ணா) பிறந்த குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரி பாளையத்துக்கு நலத்திட்டங்களை செய்ய அவர் முடிவு செய்து உள்ளார்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும், நிருபர்களுக்கு பேட்டி அளிப்பதையும் தவிர்த்து வரும் நடிகர் மகேஷ்பாபு, முதல் முறையாக அரசின் கிராம ஜோதி திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்து உள்ளார். முதல்–மந்திரி மகனின் பாராட்டு எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.