தன்னைவிட 28 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் ஷாருக் கான்

தன்னைவிட 28 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேரும் ஷாருக் கான்

மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில், பதினேழு ஆண்டுகளுக்கு முன் காதலோடு உருகி உருகி நடித்திருந்த ஷாருக் கான் அவரது மொத்த சினிமா வாழ்க்கையில், ஓரிரு படங்களைத் தவிர இன்றும் காதல் செய்யும் நாயகனாகவே வலம் வருகிறார்.

ஸ்ரீதேவியை வைத்து ‘இங்லிஷ் விங்லிஷ்’ படத்தை இயக்கிய கெளரி ஷிண்டே, பாலிவுட் படங்களை இயக்கும் பால்கி-ன் மனைவி ஆவார். கெளரி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஷாருக் கான் மற்றும் ஆலியா பட்டை வைத்து இயக்க இருப்பதாக கரண் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆலியா பட், கரண் ஜோகர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். ‘ஹைவே’ படம் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். ஷாருக் கான் தன்னைவிட 28 வயது குறைந்த ஆலியா பட்டுடன் நடிப்பதைப் பற்றி பாலிவுட் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கரண் ஜோகர், ஷாருக் கான் கூட்டணியில் வெளியான அத்தனை காதல், குடும்பம் சம்பந்தப்பட்ட படங்களும், பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அவர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடையே பெருமளவு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.