நட்டியுடன் இணையும் ராய் லட்சுமி

நட்டியுடன் இணையும் ராய் லட்சுமி

ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக மாறிய நட்டி என்னும் நட்ராஜ், ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் பிரபலமானார். இப்படம் வெற்றி பெறவே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய சென்றார். புலி படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நட்ராஜ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார்.

இவர் அடுத்ததாக புதுமுக இயக்குனர் தாஜ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். தாஜ் கூறிய ஒற்றை வரி கதை மிகவும் பிடித்துப்போக, நடிக்க சம்மதித்திருக்கிறார் நட்ராஜ். இப்படம் பயணக்கதையாக உருவாக இருக்கிறது.

இதில் நட்ராஜுக்கு ஜோடியாக ராய் லட்சுமியை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ராய் லட்சுமி முருகதாஸ் இயக்கி வரும் இந்தி படத்தில் நடித்து வருவதால் நட்ராஜ் நடிக்க இருக்கும் படத்தில் இன்னும் தேதி ஒதுக்காமல் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.