கார்த்தி, நாகார்ஜூனா இணையும் படத்தின் தலைப்பு 18ம் தேதி வெளியீடு

கார்த்தி, நாகார்ஜூனா இணையும் படத்தின் தலைப்பு 18ம் தேதி வெளியீடு

கார்த்தியும் நாகார்ஜூனாவும் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெயர் வைக்காமலேயே இதன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

படத்துக்கு நிறைய தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டன. கடைசியாக படத்துக்கு ‘தோஸ்த்’ என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த தலைப்பு தெலுங்கு தமிழுக்கு பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை செப்டம்பர் 18ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றனர். மேலும் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிடுகின்றனர். இப்படத்தை பிவிபி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். வம்சி பைடிப்பள்ளி இப்படத்தை இயக்கி வருகிறார்.