ஒரே நாளில் வெளியாகும் கமல், சிவகார்த்திகேயன், தனுஷ் படங்கள்

தனுசின் ‘மாரி’, சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படங்கள் அடுத்த மாதம் (ஜூலை) 17–ந்தேதி ரிலீசாக உள்ளன. தற்போது கமலின் ‘பாபநாசம்’ படமும் இதே தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தனுசும், சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். ‘3’ படத்தில் சேர்ந்து நடித்தார்கள். தற்போது இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன. இந்த நிலையில்தான் இருவர் படமும் ஒரே நாளில் மோத வருகிறது.

‘மாரி’ படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இதில் தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாசும் முக்கிய கேரக்டரில் வருகிறார். ‘ரஜினி முருகன்’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார்.

சுபாஷ் சந்திரபோஸ், லிங்குசாமி தயாரிக்கின்றனர். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். காதல், காமெடி படமாக தயாராகியுள்ளது.

‘பாபநாசம்’ படத்தில் கமல் ஜோடியாக கவுதமி நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகியுள்ளது. மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப் தமிழிலும் டைரக்டு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *