கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ ரிலீஸ் தேதி?

 

 

வரும் தீபாவளி தினத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ மற்றும் தல அஜீத் நடித்த ‘வேதாளம்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அஜீத்தின் வேதாளம்’ திரைப்படம் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஏம்.ரத்னம் அவர்களின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் காரணமாக தீபாவளிக்கு முந்தைய வியாழக்கிழமையான நவம்பர் 5ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.

இதே போல தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்பு அதாவது நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் வருவதால், அன்றைய தினம் ‘தூங்காவனம்’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘தூங்காவனம், ‘வேதாளம்’ படங்களுடன் வேறு சில படங்களும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், தீபாவளிக்கு இன்னும் 25 நாட்கள் இருப்பதால் விரைவில் வேறு படங்களின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.