விளம்பரத்தில் நடிக்கும் கமல்ஹாசன்

விளம்பரத்தில் நடிக்கும் கமல்ஹாசன்

பல படங்களில் நாயகனாக நடித்துள்ள கமல்ஹாசன், இதுவரை எந்த வர்த்தக விளம்பரத்திலும் நடித்ததில்லை. தற்போது இவர் முதல்முறையாக ஜவுளிக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க உள்ளார்.

இந்தியில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகிறார்கள். தமிழ் நடிகர்களும் விஜய், சூர்யா, ஆர்யா, விஷால், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்கள்.

ஆனால் ரஜினி, கமல், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்கள் எந்த விளம்பரத்திலும் இதுவரை நடித்ததில்லை. கமல் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் பலமுறை நடித்துள்ளார். தற்போது முதல் முறையாக பிரபல ஜவுளிக்கடையின் விளம்பரத்தில் கமல் நடிப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தவாரம் இதற்கான படப்பிடிப்பு நடக்கிறது.