காதலில் ஜெயிக்க வேண்டுமா?

காதல்… இதயத் தசைகளை இயக்கும் விசை  மனதை மயிலிறகால் வருடி பறக்கவைக்கும் இனம்புரியா இசை. காதல் எப்போது வரும்… எப்படி வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.காதல் என்றால் என்ன? காதலிக்காவிட்டால் அது இயல்பான நடத்தை இல்லையா? சலிக்காத அளவுக்குக் காதலை இயக்கும் காலச்சக்கரம் எது? எது சரியான காதல்?  டீன் ஏஜ் பருவத்தில் மனதில் காதலைப் பற்றி என்ன எண்ணம் தோன்றும்?

காதல் டீன் ஏஜ் ஸ்பெஷல் மட்டுமல்ல..! ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் காதல் தாக்கலாம். காதல் யார் மீது வருகிறது என்பதுதான் முக்கியம்.13 வயதில் வரும் காதலைவிட 24 வயதில் வரும் காதல்தான் முதிர்ச்சியாக இருக்கும். பள்ளிப் பருவத்தில் வரும் காதல் இருவரிடையிலான சந்தோஷ விஷயங்களை மட்டுமே பகிர்ந்துகொண்டு, எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்காது. இப்படியான பருவத்தில் காதல்வயப்பட்டு உடனடியாகத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இடையில்தான், மண வாழ்க்கையில் பெரும் சச்சரவுகள் உண்டாகும்.

உண்மையான காதலன் அல்லது காதலி என நீங்கள் உங்கள் துணையிடம் நிரூபிக்க எந்த வகையிலும் உங்கள் சுயத்தை இழக்காதீர்கள். எந்தச் சமயத்திலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். அப்படி நீங்கள் இருக்கும்போது உங்கள் மீது உண்டாகும் ஈர்ப்புதான், ‘எவர்லாஸ்டிங்� ஈர்ப்பாக இருக்கும்.காதல் என்பது ஒரு முறை பூக்கும் பூ கிடையாது. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் பூக்கும். 8 வயதிலும் வரும்… 80 வயதிலும் வரும். அந்தந்த பருவத்துக்குரிய பக்குவத்துடன் அணுக வேண்டும்.  பொதுவாக கண்மூடித்தனமான அன்பு யார் மீதும் வைக்கக்கூடாது. அப்படி வைக்கும்போதுதான் காதலி பிரிந்துவிட்டால் தற்கொலை போன்ற எண்ணங்கள் தலைதூக்குகின்றன. சிலர் போதை வஸ்துகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்புகிறார்கள்.

முதலில் ஒன்றை உணருங்கள்… காதலில் உங்கள் அன்புக்குரியவர் பிரிந்துவிட்டால் அது உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் கிடையாது. அது பொதுவாகப் பலருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். உங்கள் மனதை உங்கள் வேலையின் மேல் திருப்பி வாழ்கையில் உயர்ந்து காட்டுங்கள்”

”டீன் ஏஜ் பருவத்தில் காதல் செய்யுங்கள் ஆனால் முடிவு எடுக்காதீர்கள்!’

காதலில் சொதப்பாமல் இருக்க…
புற அழகினால் வருவது காதல் இல்லை அக அழகினால் வருவதுதான் காதல்.   கண்ணோடு மட்டும் அல்லாமல் மனதோடும் மனம்விட்டுப் பேசுங்கள்.
ரொம்ப பொசசிவ் ஆக இருக்காதீர்கள்.  உங்கள் காதலனோ, காதலியோ உங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டவர் அல்ல.
சம்பந்தமே இல்லாமல் சந்தேகப்படாதீர்கள்.
வெறும் காதல் மொழிகளை மட்டுமே பேசாமல், செயற்கையாக வாழாமல், அடுத்த கட்டத்தைப் பற்றிப் பேசி முடிவெடுங்கள்.
பிரச்சினைக்கு உரிய விஷயங்களைத் தள்ளிபோடாமல், அதை உடனடியாகக் கலந்து ஆலோசித்து, தீர்வு கண்டுபிடியுங்கள்.
எந்தக் காரணம்கொண்டும் உங்கள் காதலரை அதீதமாக நம்பாதீர்கள். கல்யாணத்தின் முன்பு வரை எந்த நேரத்திலும் உணர்ச்சிவசப்படாதீர்கள்.
காதல் என்பது வெறும் ஊடல், கூடல் சார்ந்த விஷயம் மட்டுமே அல்ல. பொறுமையும், அன்பும், விட்டுக்கொடுத்தலும் இருக்க வேண்டும். அப்போதுதான் திருமணத்துக்குப் பிறகும் காதல் இனிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *