ஒரே பாடலில் பணக்காரன் ஆவது எப்படி?: காமெடியுடன் சொல்லும் வெங்கட் பிரபு – வீடியோ இணைப்பு

ஒரே பாடலில் பணக்காரன் ஆவது எப்படி?: காமெடியுடன் சொல்லும் வெங்கட் பிரபு - வீடியோ இணைப்பு

தமிழ் திரைப்படங்களில் குப்பை பொறுக்கும் ஒருவன் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவதுப் போன்றக் காட்சிகள் வந்ததுண்டு. சிலப் படங்களில் நாயகன் ஒரே பாடலில் மிக பெரிய பணக்காரனாக உயர்வது போன்றக் காட்சிகள் இடம் பெறுவது உண்டு.

இது சாத்தியமா? என்பதை மக்கள் யோசிக்ககூட முடியாத அளவுக்கு பெரும்பாலும் இந்த பாடலில் நடிப்பவர்கள் மக்களின் அபிமானம் பெற்ற நாயகர்களாகவே இருப்பார்கள். சமீபகாலமாக ரசிகர்களும் இத்தகைய பாடல்களை ஒருவித நகைச்சுவை உணர்வோடுதான் ரசிக்க ஆரம்பிக்கின்றனர்.

யுடியூப் மூலம் நமது நாட்டின் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்து உள்ள ‘Culture machine’ நிறுவனத்தின் பிரதான அங்கமான புட் சட்னி நிறுவனம், ஒரே பாடலில் பணக்காரனாவது எப்படி என்கிற  விஷயத்தை நகைசுவையுடன் ஒரு ஆல்பமாக வழங்கி உள்ளனர்.

இந்த ஆல்பத்தில் பிரபல இயக்குனர்  வெங்கட் பிரபு நடித்து உள்ளார். ரசிகர்களை சிரிக்க வைக்கும் இந்த வீடியோவை தொடர்ந்து இத்தகைய பல வீடியோக்களை ‘புட்சட்னி’ நிறுவனம் வெளியிட உள்ளது.