ஜி.வி.பிரகாஷுக்கு ஊக்கம் கொடுத்த சிம்பு

ஜி.வி.பிரகாஷுக்கு ஊக்கம் கொடுத்த சிம்பு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன், ஆனந்தி, மனீஷா யாதவ், ஆர்யா, சிம்ரன், ப்ரியா ஆனந்த், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் படி எடுத்திருந்தார்கள். இப்படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இருந்தாலும் இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் வணீக ரீதியாகவும் இப்படம் வெற்றியடைந்து வருகிறது. தற்போது இப்படத்தை பார்த்த சிம்பு ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

மேலும், படத்தின் இயக்குனர் ஆதிக் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இன்றைய தலைமுறைக்கான துணிச்சலான படம் என்றும் பாராட்டியிருக்கிறார்.

எதிர்மறையான கருத்துக்களை சந்தித்து வந்த ஜி.வி.பிரகாஷுக்கு, சிம்பு பாராட்டியிருப்பது அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.