எந்திரன்-2 படத்தில் விக்ரமுக்கு பதிலாக பாலிவுட் ஹீரோ?

எந்திரன்-2 படத்தில் விக்ரமுக்கு பதிலாக பாலிவுட் ஹீரோ?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். அவருக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் விக்ரம் கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு பாலிவுட் நடிகரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினரிடம் யோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகரை நடிக்க வைப்பதன் மூலம் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்பதாலேயே தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இந்த படத்தில் விக்ரமை நீக்க இயக்குனர் ஷங்கருக்கும், ரஜினிகாந்துக்கும் விருப்பமில்லையாம். எனவே, லைக்கா நிறுவனத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் தற்போது இருவரும் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இதற்கு சரியான முடிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.