தனுஷின் மாரியை “சரமாரியாக” பார்க்கலாம்.. சென்சார் சான்று!

Dhanush's Maari gets U

தனுஷின் அடுத்த படமான மாரிக்கு அனைத்துத் தரப்பினரும் பாரக்கத் தக்க படம் என யு சான்றளித்துள்ளது சென்சார் குழு. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் – காஜல் அகர்வால் நடித்துள்ள படம் மாரி. இந்தப் படம் வரும் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
Dhanush's Maari gets U
இந்த நிலையில் படத்தை சென்சாருக்கு திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளர். இந்தப் படம் அனைவரும் பார்க்கத் தகுந்த வகையில் உள்ளதான் தணிக்கைக் குழுவினர் அனைவரும் தெரிவித்ததால், யு சான்று வழங்கினர். வாலு படம் வெளியாகவிருந்ததால்தான் மாரியை தள்ளிப் போட்டனர். இப்போது அந்தத் தேதியில் வாலு வராமல் போனால், மாரியை வெளியிட வாய்ப்புள்ளது.