கமல் உத்தமவில்லனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங் | And the biggest Opening Kamal uttamavillan

கமல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இதில், பூஜாகுமார், ஆண்ட்ரியா, மாளவிகா மேனன், நாசர், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படம் நாளை மறுநாள் (மே-1) முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதற்காக இன்று முதலே தியேட்டர்களில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே படத்தின் மொத்த டிக்கெட்டும் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால், இப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *