இந்தியாவின் குஜராத்தில் வேற்றுக்கிரக வாசி

வேற்றுகிரவாசிகள் தொடர்பான நம்பிக்கை, கட்டுகதைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.இந்த கதைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த வருடம் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பான செய்திகள் மக்களை பயத்தில் உறைய வைத்தது.

சூரத் நகரில் கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ஒரு ஏழை தம்பதிக்கு ஒரு வித்தியாசமான குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையை பார்த்து மருத்துவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அதாவது சிவப்பு நிறத்தில், கண்கள் பெரிதாக, அவை தலையின் மேற்பகுதியில் ஒட்டியவாறு வேற்றுகிரகவாசியின் குட்டி போல அந்த குழந்தை காட்சியளித்தது.

சில தினங்களில் இது தொடர்பான படங்கள் சமூகவலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் பரவியது. மேலும், இது வேற்றுகிரகவாசி என்றும், அதனை உடனே கொன்றுவிடுமாறும் பலர் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான விவாதங்கள் தொடர் கதையாக சென்று கொண்டிருந்தது. மருத்துவர்களும் உண்மையில் இது குழந்தையா இல்லை வேறு உயிரினமா என்று குழம்பிப் போயிருந்தனர்.

வேற்றுகிரகவாசி பூமிக்கு வந்துவிட்டதாகவும், உலகம் அழியப் போவதாகவும் ஒரு கும்பல் தங்கள் பங்கிற்கு கிளப்பிவிட்டனர். இந்த விவகாரம் பெரிய விடயமாக பேசப்பட்டது.

இந்நிலையில் இதற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அந்த குழந்தை ஒரு அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அந்த குழந்தை Harlequin-type ichthyosis தாக்கப்பட்டிருந்தது. இந்த அரியவகை நோய் தாக்கப்பட்டால் உடலின் தோல்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.

மேலும் தேன் கூடு போன்ற அமைப்பு தோல்களின் மேற்புரத்தில் ஏற்படும். அதே போல் சிவப்பு நிற செதில்களும், கண், காது போன்றவை உருமாற்றமடைந்தும் காணப்படும்.

கடந்த காலத்தில் இந்த நோய் ஒரு அபாயகரமானதாக விளங்கியது. இந்த நோய் வந்தால் அந்த குழந்தை உயிர்பிழைப்பது எளிதான காரியம் இல்லை. ஆனால் தற்போது மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின்னர் இந்த அரியவகை நோய் கண்டுபிடிக்கப்பட்டதால் அனைத்து விதமாக எழுந்த சர்ச்சைகளுக்கும் பதில் கிடைத்தது.

alien_baby_002

alien_baby_003

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *