விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறேனா?: அக்ஷரா ஹாசன் விளக்கம்

கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன், இந்தியில் பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தில் அவருடைய நடிப்பு பிரமாதமாக பேசப்படவே, இவரை நோக்கி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுக்கத் தொடங்கினார். ஆனால், எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், லிங்குசாமி-விஷால் கூட்டணியில் வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி ஆர்வம் காட்டி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.

தற்போது இந்த செய்தியை அக்ஷரா ஹாசன் மறுத்துள்ளார். ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்தில் நடிக்க யாரும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.

விஷால் தற்போது ‘பாயும் புலி’ படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ‘சண்டக்கோழி’ படத்தில் ஹீரோயினாக நடித்த மீரா ஜாஸ்மின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *