ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போவதாக சமீபகாலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை யாரும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது பா.ரஞ்சித் தான் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார்.

கதாநாயகி உள்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்களை கபிலன், உமாதேவி, கானா பாலா ஆகியோர் எழுதுகின்றனர். பிரவீன் கே.எல். படத்தொகுப்பை கவனிக்கிறார். என்னை அறிந்தால் படத்துக்கு நடனம் அமைத்த சதீஷ் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிகிறார்.

ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கி 60 நாட்கள் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் சென்னையிலும் 60 நாட்கள் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *