பெங்களூர் பள்ளியில் லட்சுமிமேனன் பிளஸ்–2 தேர்வு எழுதுகிறார்

f652fbed-f4af-4865-9baf-adeca5934ada_S_secvpfகும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
சிப்பாய் மற்றும் கார்த்தியுடன் நடித்த கொம்பன் படங்கள் விரைவில் திரைக்கு வருகிறது. லட்சுமிமேனனுக்கு பூர்வீகம் கேரளா, எர்ணாகுளம் அருகில் உள்ள திருப் புணித்துரா அவரது சொந்த ஊர் ஆகும்.
லட்சுமிமேனன் சினிமாவில் நடித்துக் கொண்டே பள்ளிப்படிப்பை முடித்தார். கடந்த ஆண்டு பிளஸ்–1 படித்து முடித்தார். தற்போது பிளஸ் –2 பொதுத்தேர்வை பெங்களூரைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மூலம் எழுதி வருகிறார். ஏப்ரல் 5–ந் தேதியுடன் தேர்வு முடிகிறது. மே மாத கடைசியில் ரிசல்ட் வெளிவருகிறது.
கொம்பன் படப்பிடிப்புக்கு இடையே லட்சுமிமேனன் பிளஸ் – 2 தேர்வுக்கான பாடங்களையும் தீவிரமாக படித்து வந்தார். பிளஸ் – 2 படித்து விட்டு மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று லட்சுமி மேனன் தெரிவித்தார் என்றாலும் தொடர்ந்து நடிப்பேன்.
பாடுவதையும் நிறுத்த மாட்டேன் என்றார். இந்த விஷயத்தில் தனக்கு பெற்றோர் எந்த நிபந்தனையும் நெருக்கடியும் விதிப்பதில்லை என்றும் எந்த துறையை தேர்வு செய்வது என்பதை எனது முடிவுக்கே விட்டு விட்டனர் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *