படங்கள் குவிவதால் நயன்தாரா சம்பளம் கிடுகிடு உயர்வு

0013497b-8671-413a-a5cc-1dd11406fb74_S_secvpfநயன்தாரா சம்பளம் ரூ.2 கோடியை தாண்டியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா 2004–ல் ‘ஐயா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ரஜினி, சரத்குமார், விஜய், அஜீத், சூர்யா, விஷால், ஆர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள படஉலகில் முன்னணி நடிகையாக தொடர்ந்து வலம் வருகிறார்.
காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது அவரது மார்க்கெட் சரிந்து விடும் என பேச்சு கிளம்பியது. ஆனால் இரண்டாவது ரவுண்ட் துவங்கியபோதும் கலக்கினார். தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்தனர். படங்கள் குவிந்தது. தமிழ் படஉலகில் தொடர்ந்து நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார்.
தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ‘மாஸ்’, சிம்புவுக்கு ஜோடியாக ‘இது நம்ம ஆளு’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரவுடிதான்’ படங்களில் நடிக்கிறார். ‘மாயா’ என்ற பேய் படத்திலும் நடிக்கிறார்.
மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த ‘நண்பேன்டா’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படங்கள் குவிவதால் நயன்தாராவின் சம்பளம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. நயன்தாரா தற்போது ரூ.2 கோடியே 30 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *