கவர்ச்சிக்கு மாறிய நடிகை அஞ்சலி

கவர்ச்சிக்கு மாறிய நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி தெலுங்கு படமொன்றில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடை குறைப்பு செய்து படு கவர்ச்சியாக நடிக்கிறாராம். ஷகிலா, சோனா மற்றும் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவுக்கு இணையாக கவர்ச்சியில் கலக்குகிறாராம்.

படப்பிடிப்பில் அவரின் கவர்ச்சி தோற்றத்தை பார்த்து படக்குழுவினரே ஆச்சரியப்படுகிறார்களாம். மார்க்கெட்டை தக்க வைக்க இப்படி கவர்ச்சியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஞ்சலி பெண் தாதா வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கூலிப்படைகள் வைத்து கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது போல் வருகிறாராம். எனவேதான் கேரக்டருக்கு தகுந்தாற் போல் கவர்ச்சியில் கலக்குகிறார் என்கின்றனர்.

அஞ்சலி தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘அப்பாடக்கரு’, விமல் ஜோடியாக ‘மாப்ள சிங்கம்’, விஜய் சேதுபதியுடன் ‘இறைவி’ படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *