மே 1 தொழிலாளர் தினத்தில் வெளியாகும் உத்தம வில்லன்

கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லன் மே 1 தொழிலாளர்கள் தினத்தில் வெளியாகிறது.

உத்தம வில்லன், விஸ்வரூபம் 2, பாபநாசம் என கமலின் மூன்று படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அதில் உத்தம வில்லன் முதலில் வெளிவருகிறது. ஏப்ரல் 2 திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட படம், பிறகு ஏப்ரல் 10 -க்கு தள்ளிப் போனது. தற்போது மே 1 படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மே 1 எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். வெங்கட்பிரபுவின் மாஸ் படமும் மே 1 திரைக்கு வரும் என கூறப்பட்டது. உத்தம வில்லனின் வருகிகையில் இந்தப் படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *