பிரபலங்களை ஆட்டிப் படைக்கும் கேட்ஜட் மோகம்: அறுவை சிகிச்சையை வர்ணனையுடன் டுவீட் செய்த கதாநாயகர்

d4996c6b-e651-44f2-915a-dc56655ab8e8_S_secvpfபல்வேறு துறை பிரபலங்களும் தங்களது வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்றவற்றின் மூலம் அவ்வப்போது தங்களை பின்தொடரும் அபிமானிகளுடன் பகிர்ந்தபடி உள்ளனர். இதன் மூலம் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுவதாக பிரபலங்கள் நம்புகின்றனர்.
இந்த வரிசையில் பிரபல பாலிவுட் கதாநாயகராக விளங்கும் ரன்வீர் சிங்கும் ஒருவர். இவரும் தனது படப்பிடிப்பின்போது நிகழும் அரிய சம்பவங்களை படம் பிடித்து, தனது ‘டுவிட்டர்’ அபிமானிகளுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். சமீபத்தில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ரன்வீருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இந்த காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆபரேஷன் மேஜையில் படுத்தபடி, தனது ‘செல்பி’ படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ரன்வீர், கிரிக்கெட் போட்டி பாணியில் முழு ஆபரேஷனையும் நேர்முக வர்ணனை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
ஆபரேஷனுக்கு பின்னர் உடல்நலம் தேறிவரும் ரன்வீர் சிங், வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *