படம் வெளியாகும் முன்பே அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

cc4b0b32-1b4c-47f0-ad49-620894e20a1c_S_secvpfசினிமா ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் வெளியானால், வெளியான நாளன்று அந்த நடிகரின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பூஜை செய்து ஆரவாரத்துடன் கொண்டாடுவர்.
இந்த கொண்டாட்டங்கள் பெரும்பாலும் படம் வெளியாகும் நாளே நடைபெறும். அன்றைய தேதியில்தான் தியேட்டரிலும் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் இதுமாதிரியான கொண்டாட்டங்கள் படம் வெளியாகும் நாள் கொண்டாடப்படும்.
ஆனால், வருகிற 5-ந் தேதி வெளியாகவிருக்கும் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாவதற்கு முன்பே அஜித் ரசிர்கள் அப்படத்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடியுள்ளனர்.
நேற்று இரவு சென்னை காசி திரையரங்கில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய ‘என்னை அறிந்தால்’ கட்-அவுட்டுக்கு அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதை, அந்த வழியாக சென்ற அனைவரும் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்தனர்.
படம் வெளியாகும் முன்பே அஜித் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் நடத்திய பாலாபிஷேகத்தை பார்த்த அனைவரும் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கும் என்று கூறினார்கள். வருகிற 5-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிரும் இப்படம் வசூலிலும் பெரிய சாதனையை படைக்கும் என்றார்கள்.
மேலும், அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் கட்-அவுட்கள் அமைப்பது, கொடி, தோரணங்கள் கட்டுவது என்று ‘என்னை அறிந்தால்’ படத்தை வரவேற்க களமிறங்கியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *