நண்பேன்டா – திரை விமர்சனம்

nanbenda1842014_m2படம் ஆரம்பிக்கும்போதே உதயநிதியும்-சந்தானமும் ஜெயிலில் இருப்பதுபோன்ற காட்சியுடன் தொடங்குகிறது. அதன்பின் பிளாஸ்பேக் காட்சிகளாக விரிகிறது.
கதைப்படி நாயகன் உதயநிதி தஞ்சாவூரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பரான சந்தானம் திருச்சியில் ஓட்டல் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
வேலை வெட்டி எதுவும் இல்லாததால் மாதாமாதம் சந்தானத்துக்கு சம்பளம் போடும் சமயம் பார்த்து திருச்சிக்கு சென்று அவருடைய பணத்தில் ஊர் சுற்றி, ஜாலியாக பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்து வருகிறார் உதயநிதி.
அதுபோல், ஒருமுறை திருச்சிக்கு போயிருக்கும்போது அங்கு நயன்தாராவை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது காதல் வயப்படுகிறார். ஆனால், நயன்தாராவோ இவரது காதலை கண்டுகொள்வதாக இல்லை.
சமூக சேவைகளில் நாட்டம் உள்ள நயன்தாராவை எப்படியாவது தன் பக்கம் ஈர்க்கவேண்டும் என்பதற்காக அவளுக்கு பிடித்ததுபோல், உதயநிதியும் சமூக சேவைகளில் ஈடுபட தொடங்குகிறார். அதில் நயன்தாராவையும் கவர்கிறார். இத்தோடு முதல் பாதி முடிவடைந்திருக்கிறது.
இடைவேளை வரை சந்தானம்-உதயநிதி காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. படத்துக்கு படம் நயன்தாராவின் அழகு கூடிக் கொண்டேதான் இருக்கிறது. சமூக சேவகியாகவும் மனதில் பதிகிறார். சந்தானம் பேசும் வசனங்கள் எல்லாம் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது.
இப்படத்தில் உதயநிதி முதன்முதலாக ஒரு சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறார். அண்ணாமலை படத்தில் குஷ்புவை வில்லன்களிடமிருந்து ரஜினி காப்பாற்றும் சண்டைக் காட்சியைப் போலவே இந்த படத்தில் ரொமான்ஸ் கலந்த சண்டைக் காட்சியை அமைத்திருக்கிறார்கள். அது நன்றாகவே வந்திருக்கிறது. உதயநிதியும் அதை நன்றாக செய்திருக்கிறார்.
மேலும் விமர்சனம் விரைவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *