குடியரசு தினத்தில் சென்னையில் ஆணழகன் போட்டி: நடிகர் விக்ரம் பங்கேற்பு

ba3d3471-bb08-4515-a1d4-f7be7814fa3d_S_secvpfசென்னை மாவட்ட ஆணழகன் சங்கம், தமிழ்நாடு மாநில ஆணழகன் சங்கத்தின் ஆதரவோடு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ஆணழகன் போட்டி நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் போட்டியில் 9 உடல் எடை பிரிவுகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியும் நடைபெறுகிறது.
இதில் முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், 2–ம் பரிசு ரூ. 15 ஆயிரம், 3–ம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது தவிர 9 உடல் எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் 9 பேரில் சிறந்த நபரை தேர்ந்தெடுத்து ‘‘ஸ்டீல் மேன் ஆப் தமிழ்நாடு 2015’’ பட்டமும் ரூ. 5 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
பரிசளிப்பு விழாவில் சென்னை மாவட்ட ஆணழகன் சங்க தலைவர் ராயபுரம் மனோ தலைமையில் நடிகர் விக்ரம், சென்னை கஸ்டம்ஸ் கமிஷனர் மயன்குமார் , காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் சிவிலங்கம், டாக்டர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்கள்.
விழாவில் கமல்தத்தர், புஷ்பராஜ், கோபிலிசங்கர், ஜிம் பாபு, குருநாதன், மோகன் குமார் பங்கேற்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *