எங்கள் குடும்பத்தில் மேலும் ஒருவர்: டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய பிரசன்னா

29155bca-ad74-46fb-8848-38f1cc82ed1f_S_secvpf

நடிகர் பிரசன்னாவுக்கும், சினேகாவுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து கடைசியில் இருவருடைய பெற்றோர்கள் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் சினேகா சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார். படவிழாக்களிலும், பொது விழாக்களிலும் இருவரும் ஒன்றாகவே கலந்துகொண்டனர்.

தற்போது கடந்த சில மாதங்களாக சினேகா எந்த படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருந்து வருகிறார். அதுபோல் படவிழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதுமில்லை.

இந்நிலையில், பிரசன்னா தனது குடும்பத்தில் புதிதாக ஒருத்தர் வருகிறார் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியத்துவமானது.

மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் எங்கள் குடும்பத்தில் புதிதாக ஒருத்தர் வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

சினேகா கர்ப்பமாக இருப்பதைத்தான் பிரசன்னா இவ்வளவு சூசகமாக சொல்லியிருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது. எது, எப்படியோ இவர்கள் குடும்பத்திற்கு அந்த புதிய நபரை நாமும் அன்புடன் வரவேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *