அனுஷ்கா சர்மா தயாரித்து நடித்துள்ள என்எச் 10: 8 நாட்களில் 21 கோடி வசூல்

fa8f9e37-9e7e-4a3a-b3b5-3e6f77865cd0_S_secvpfஅனுஷ்கா சர்மாவை காதலி என்று முதன்முறையாக விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டுவதற்கு காரணமான இருந்த திரைப்படம் என்எச் 10. பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா முதன் முதலாக தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், இதுவரை பாக்ஸ் ஆபீசில் 21.7 கோடி வசூல் செய்துள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் மார்ச் 13-ம் தேதி அன்று வெளியான இந்தப் படத்தைப் பார்த்த கோலி ‘என்எச் 10 படம் பார்த்து அசந்துவிட்டேன். புத்திசாலித்தனமான படம் மட்டுமல்ல எனது காதலியின் அற்புதமான நடிப்பும் கவர்ந்தது.‘ என்று ட்விட்டரில் தெரிவித்தார்.
கவுரவக் கொலைகள் மற்றும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்த, இந்தப்படம் விமர்சகர்களின் பாராட்டையும் ரசிகர்களின் பேராதரவையும் பெற்று, வெளியான மூன்றே நாட்களில் 13 கோடி வசூல் செய்தது. நேற்று முன்தினம் வரை 21.7 கோடி வசூல் செய்துள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்து புதிய திரைப்படங்கள் எதுவும் வராத நிலையில், டெல்லி, உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் மட்டும் 30 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *