த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் டீசர் நாளை வெளியீடு

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்து வருகிறார். மேலும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பல்வேறு இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இளைஞர்களைப் பற்றி உருவாகும் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை நாளை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த டீசர் அனைத்து இளைஞர்களுக்கும் பிடிக்கும், அவர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியை நினைவுக் கூறும் வகையில் அமைந்திருக்கும் என்று தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *