சுசீந்திரன் படத்தில் அனிருத்|Suseentharan film Anirudh

‘வெண்ணிலா கபடி குழு’,  ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘பாண்டிய நாடு’ ஆகிய தரமான படங்களை தந்தவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் தற்போது விஷாலை வைத்து ‘பாயும் புலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷாலும்-சுசீந்திரனும் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.

இதுதவிர, புதுமுக இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கும் ‘வில் அம்பு’ என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். இப்படத்தில் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரை தமிழ் சினிமா பிரபலங்களை வெளியிட வைத்து பிரபலப்படுத்தினார் சுசீந்திரன்.

தற்போது, இந்த படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். சமீபகாலமாக இசையமைப்பாளர் அனிருத் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது இந்த படத்திற்கும் ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளார். நவீன் இசையில் இந்த பாடல் அருமையாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *