இணைய தளங்களில் என் நிர்வாண வீடியோவை பரப்புவதா ராதிகா ஆப்தே ஆவேசம் | Web sites spreading a video of my naked obsession Radhika Apte

தமிழில் ‘தோனி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஹாலிவுட் படமொன்றில் இவர் துணிச்சலாக நிர்வாணமாக நடித்துள்ளார். இக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஒரு ஆண் முன்பு தனது ஆடையை கழற்றுவது போல் இக்காட்சியை எடுத்தனர்.

இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் மட்டுமே இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு இதில் அவர் நடித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் நடித்த காட்சிகளை ரகசியமாக வைத்து இருந்தனர்.

ஆனால் திடீரென ராதிகா ஆப்தே நடித்த நிர்வாண காட்சி இணைய தளங்களில் பரவியது. யாரோ திருட்டுத்தனமாக இதைவெளியிட்டு விட்டனர். இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சியானார்.

வீடியோவை கசிய விட்டவர்களை கண்டுபிடிக்கும்படி போலீசில் படத்தின் டைரக்டர் புகார் அளித்துள்ளார். நிர்வாண காட்சியில் ராதிகா ஆப்தே நடித்ததற்கு விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

நான் நடித்த நிர்வாண வீடியோவை யாரோ இணைய தளங்களில் வெளியிட்டு விட்டனர். நிறைய பேர் வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்.

அவர்களை பற்றி சிந்திக்கவோ நடவடிக்கை எடுக்கும்படி புகார் செய்யவோ எனக்கு நேரம் இல்லை. நான் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். இவர்களுக்காக என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

என்னையோ எனது குடும்பத்தினரையோ இந்த செயல் சிறிதும் பாதிக்க வில்லை. எனவே இதுபற்றி எனக்கு கவலை இல்லை.

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *