ஹன்சிகாவை இளவரசி என்று அழைக்கும் விஜய்

தற்போது, விஜய்க்கு ஜோடியாக ‘புலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகாவை விஜய் செல்லமாக இளவரசி என்று அழைத்து வருகிறாராம். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது,
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்தான். அவர் எப்போதும் என்னை செல்லமாக ஹன்சு என்றுதான் செல்லமாக அழைப்பார். ஆனால், இப்போது என்னை இளவரசி என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்.
உங்களுக்கு அது ஏன் என்று தெரிகிறதா? ஆம். நான் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் ‘புலி’ படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். அதனால்தான், விஜய் என்னை இளவரசி என்று அழைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் ஹன்சிகாவுடன், ஸ்ருதிஹாசனும் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார். மேலும், ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சிம்பு தேவன் இயக்கிவருகிறார். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்து வருகிறார்.