விஜய்யின் ஜோடி யார் நீடிக்கும் இழுபறி

1424423519-1078அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தாணு தயாரிக்க ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான இரண்டே தகவல்கள் இவை மட்டும்தான்.
விஜய் ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என கூறப்பட்டது. பிறகு அது வெறும் வதந்தி என தெளிவாயிற்று. இந்நிலையில் இரு நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன.
ஒருவர் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார் ஷ்ரத்தா. இன்னொருவர் ஐ -இல் நடித்துவிட்டு தற்போது உதயநிதியுடன் நடித்துவரும் எமி ஜாக்சன்.
அட்லி யாரை டிக் செய்கிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *