வசூல் வரலாற்றில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் புதிய சாதனை- இந்தியாவில் இரண்டே நாளில் ரூ.24.30 கோடி குவித்தது

இந்தியாவில் மட்டும் 2 ஆயிரத்து 300 தியேட்டர்களில் திரையிடப்பட்டு கடந்த இரண்டு நாட்களில் 24.30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், வார இறுதிக்குள் இந்த தொகை 45 கோடி ரூபாயை எட்டிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த அபார வசூல் சாதனையின் பின்னணியில் இப்படத்தின் கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ள மறைந்த பால் வாக்கர் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன.
30-11-2013 அன்று நடைபெற்ற ஒரு கார் விபத்தில் பலியான பால் வாக்கர் நடித்த கடைசி படம் இது என்பதால் அவரை பெரிய திரையில் காண குவியும் ரசிகர்களின் படையெடுப்பும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அவ்வகையில், இந்தியாவில் இதுவரை திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்த அத்தனை ஹாலிவுட் படங்களின் முந்தைய சாதனைகளையும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் நிச்சயமாக முறியடித்துவிடும் என சினிமா வினியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.