ராய் லட்சுமியின் இந்திப்பட கனவை நனவாக்கிய முருகதாஸ்

மௌனகுரு படத்தை முருகதாஸ் இந்தியில் இயக்குவதும், அருள்நிதி நடித்த வேடத்தை இந்தியில் சோனாக்ஷி சின்கா செய்வதும் அனைவரும் அறிந்ததே. இந்த இந்திப் படத்தில் அனுராக் காஷ்யப், சத்ருகன் சின்கா ஆகியோரும் நடிக்கின்றனர். அகிரா என படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஊழல் போலீஸ் அதிகாரியின் காதலியாக நடிக்க ராய் லட்சுமியை முருகதாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்தியில் கதாநாயகியாக வேண்டும் என்ற கனவில் இருந்த ராய் லட்சுமிக்கு யதார்த்தம் தெரியும் என்பதால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆக, ராய் லட்சுமியின் இந்திக் கனவு முருகதாஸின் மூலம் நனவாகியிருக்கிறது.