ரத்தம் வடிய நடித்த நீது சந்திரா

ஆர்கே ஹீரோவாக நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நீது சந்ஙதிரா ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை வளசரவாக்கத்தில் நடந்து வருகிறது.
நடிகர் பவனுக்கும், நீது சந்திராவுக்குமிடையில் சண்டை நடப்பது போன்ற காட்சியை வளசரவாக்கத்தில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் படமாக்கினார்.
அதில் நீது சந்திராவின் முகத்தில் காயாம்பட்டு ரத்தம் கொட்டியது. முதலுதவிக்குப் பின் காயத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் நீது சந்திரா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.