முதல்முறையாக திகில் படத்தில் நடிக்கும் திரிஷா

இவருடைய நடிப்பில் ‘பூலோகம்’, ‘அப்பாடக்கர்’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும், ஓவியா, பூனம் பஜ்வா ஆகியோருடன் இணைந்து ‘போகி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர, செல்வராகவன்-சிம்பு இணையும் அடுத்த படத்திற்கு இவர்தான் ஹீரோயின் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திரிஷா தனது மேனேஜர் கிரிதர் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, எனது மேனேஜர் கிரிதரின் ‘கிரிதர் புரொடக்ஷன் ஹவுஸ்’ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் நான் நடிப்பதை சந்தோஷமாக அறிவிக்கிறேன்.
இயக்குனர் கோவி இயக்கும் இந்த படம் திகில் கலந்த காமெடி படமாக உருவாகவிருக்கிறது. இந்த படத்தின் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் என்னை மிகவும் கவர்ந்தது. வருகிற மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று கூறியுள்ளார்.
திரிஷா, இதுவரை திகில் படங்களில் நடித்ததேயில்லை. அவர் திகில் படங்களில் நடிக்கப் பயப்படுகிறார் என்று வதந்திகள் பரவி வந்தநிலையில், அந்த மாதிரியான கதைகள் தன்னை தேடி வராததால் தான் திகில் படங்களில் நடிக்கவில்லை.
கூடிய விரைவில் திகில் படங்களில் நடிப்பேன் என்று பதில் கூறியிருந்தார் திரிஷா. தற்போது, இதற்கு பதிலடி கொடுக்கவே, இந்த திகில் படத்தில் நடிக்க திரிஷா ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.