மாஸ் படத்தை முடித்துக் கொடுத்த சூர்யா

d3ac7253-627a-4aad-9d8a-f9fbb3cc53dc_S_secvpfசூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மாஸ்’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். நயன்தாரா, ப்ரணிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். பார்த்திபன், சமுத்திரகனி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது சூர்யா நடிக்க வேண்டிய காட்சிகளை அனைத்தையும் படமாக்கிவிட்டார் வெங்கட்பிரபு. மேலும் டப்பிங் பணியையும் சூர்யா முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மாஸ் படத்தின் பாடல்கள் இம்மாதமும், படத்தை மே மாதமும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து விக்ரம் குமார் இயக்கயிருக்கும் ‘24’ படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்க இருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.v

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *