மார்க்கெட் இருக்கும்போது சம்பளம் அதிகம் வாங்குவது தவறல்ல: சமந்தா

திரைப்படங்களில் கதாநாயகர்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களை சுற்றிதான் கதையும் பின்னப்படுகிறது. கதாநாயகிகளும் முக்கியமானவர்கள்தான். எங்களுக்கும் தனிப்பட்ட கூட்டம் இருக்கிறது.
கதாநாயகர்களை பார்ப்பதற்காக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதைபோல் கதாநாயகிகளை பார்க்கவும் வருகிறார்கள். எங்களையும் ரசிக்கிறார்கள். எனவே நடிகைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம், எங்களுக்கும் படங்களில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கதாநாயகிகள் சம்பளம் அதிகம் வாங்குவதையும் விமர்சிக்கிறார்கள். அதிக சம்பளம் வாங்குவது தவறல்ல. படங்கள் நன்றாக ஓடுவதால்தான் அதிக சம்பளம் தருகிறார்கள்.
தோல்வி அடைந்தால் தருவது இல்லை. சம்பளத்தை குறைத்து விடுவார்கள். எனவே மார்க்கெட் இருக்கும்போது சம்பளத்தை கூட்டி கேட்பது நியாயமானதுதான்.
பணம் மட்டும்தான் என் குறிக்கோள் என்றும் யாரும் கருதிவிட வேண்டாம். நல்ல கதைசம்சம் உள்ள படங்கள் அமைந்தால் சம்பளம் வாங்காமல் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.
உள்ளாடை விளம்பர படத்தில் நடிக்க போவதாக செய்திகள் பரவி உள்ளன. அப்படி எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை.