ஜெயம் ரவி படத்துக்கு இசையமைக்கும் ஹிப் பாப் தமிழா ஆதி

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதி, இசையமைத்திருந்தார். இந்த பாடல்கள் பெரிய அளவில் வெற்றியடைந்தன. குறிப்பாக ‘பழகிக்கலாம்’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்கள் வரிசையில் இவருக்கும் இடம் கிடைத்தது. இவர், தற்போது ஜெயம் ராஜா-ஜெயம் ரவி இணைந்திருக்கும் ‘தனி ஒருவன்’என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதுதான் இப்படத்திற்கு இசையமைப்பாளரை நியமித்துள்ளனர்.
இப்படத்தில் மொத்தம் 5 பாடல்களுக்கு மெட்டமைக்கவுள்ளாராம் ஆதி. இதில் 2 பாடல்களை வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் பாடல் பதிவுக்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கப் போகிறாராம் ஆதி. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஜெயம் ரவியும்-நயன்தாராவும் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.