சிறுகதையை படமாக்கும் ரேவதி

1428310279-5449ரேவதி, மித்ர மை ப்ரெண்ட் என்ற ஆங்கிலப் படத்தையும், பிர் மிலிங்கே, மும்பை கட்டிங் ஆகிய இரு இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார்.
அவர் கடைசியாக, மலையாளத்தில் கேரளா கஃபே படத்தில் ஒரு எபிசோடை இயக்கினார். பத்து இயக்குனர்கள் தனித்தனியாக எடுத்த பத்து குறும்படங்களின் தொகுப்பு இது. பத்தில் ஒருவர் ரேவதி.
சில வருடங்களாக மலையாள சினிமாவில் மட்டும் நடித்து வந்த ரேவதி மீண்டும் படம் இயக்குகிறார். சிறுகதை ஒன்றை தழுவி இந்தப் படத்தை அவர் எடுக்கிறார்.
எந்த சிறுகதை, எந்த மொழியில் படத்தை எடுக்கிறார், யார் நடிக்கிறார்கள் போன்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.