கேரளா செல்லும் புலி படக்குழு

மேலும், ஸ்ரீதேவி கபூர், கன்னட நடிகர் சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்திற்கு நட்டி என்ற நடராஜ் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சமீபத்தில் தலக்கோணம் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். தற்போது புலி படக்குழு கேரளா செல்லவுள்ளனர்.
அங்கு பாடல் காட்சிகளையும் சில முக்கிய காட்சிகளையும் படமாக்கவுள்ளனர். அங்கு சுமார் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் பாடல்களை மே அல்லது ஜூன் மாதத்திலும், படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.