கேரளாவில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் விஜய்

இங்கு விஜய்-ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம். இந்த காதல் காட்சிகளை படமாக்குவதற்காக ஆர்ட் டைரக்டர் ஒரு அழகான மார்க்கெட் செட் ஒன்றை உருவாக்கியுள்ளாராம். இதில், ஸ்ருதிஹாசன், தம்பி ராமையா ஆகியோர் இடம்பெறும் காட்சிகளை படமாக்க இருக்கிறார்களாம்.
‘புலி’ படத்தில் ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக விஜய் வெளிநாட்டு கலைஞர்களிடம் வாள் பயிற்சி மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.