ஐஸ்வர்யாராய் பாதுகாப்புக்கு மாதம் ரூ.40 லட்சம் செலவு

ஐஸ்வர்யாராய் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பதால் அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் திரள்கிறார்கள். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஐஸ்வர்யாவை காண முண்டியடிக்கின்றனர். அவரிடம் தொட்டு பேசவும் விரும்புகின்றனர்.
இதையடுத்து ஐஸ்வர்யா ராய்க்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அடிதடி தெரிந்த 12 பாதுகாவலர்கள் ஐஸ்வர்யாராய் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தினமும் காலையில் ஐஸ்வர்யாராயை வீட்டில் இருந்து அழைத்து வருகிறார்கள் படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டில் விட்டு விடுகின்றனர். ரசிகர்கள் யாரையும் ஐஸ்வர்யாராய் பக்கத்தில் இவர்கள் நெருங்கவிடுவது இல்லை.
இந்த 12 பாதுகாவலர்களுக்கும் சம்பளம் சாப்பாட்டு செலவுகள் பெட்ரோல் தங்கும் இட வசதி என மாதம் ரூ.40 லட்சம் செலவு ஆகிறதாம். இந்த செலவு முழுவதையும் தயாரிப்பாளர் தலையிலேயே கட்டி விடுகிறாராம். பாதுகாவலர்களுக்கு ஆகும் செலவு ஐஸ்வர்யாராயின் சம்பளத்தை மிஞ்சும் என்கின்றனர்.
இது தவிர மகள் ஆரத்யாவையும் படப்பிடிப்புக்கு அவ்வப்போது அழைத்து வருகிறார். மகள் விளையாடுவதற்காக தயாரிப்பாளர் செலவில் தனி கேரவனும் நிறுத்தப்பட்டு உள்ளது.