ஏப்ரல் 17 திரைக்கு வரும் பாகுபலி

கடைசியாக எஞ்சியிருந்த ஒரு பாடல் காட்சியையும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கு அமைத்து எடுத்துள்ளார் ராஜமௌலி. இந்தப் பாடல் காட்சியில் பிரபாஸும், தமன்னாவும் ஆடியுள்ளனர். தமிழில் இப்படம், மகாபலி என்ற பெயரில் வெளியாகிறது.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஏப்ரல் 17 படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக படவெளியீடு குறித்து அறிவிக்கவில்லை எனினும் ஏப்ரல் 17 படம் திரைக்குழு வரும் என படயூனிட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.