அஜித் பிறந்த நாளை கைவிட்ட வெங்கட் பிரபு

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் ‘மாஸ்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ப்ரணிதா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்தது. இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காண்பித்த படக்குழுவினர் படத்தை அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியிட இருப்பதாக முதலில் அறிவித்திருந்தனர்.

தற்போது மே 1-ம் தேதியை கைவிட்டு விட்டு மே 15-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். மே 1-ம் தேதி கமலின் ‘உத்தமவில்லன்’, அருண் விஜய்யின் ‘வா டீல்’, கௌதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதால் மாஸ் படத்தை மே 15-ம் தேதி ஒத்திவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

3 thoughts on “அஜித் பிறந்த நாளை கைவிட்ட வெங்கட் பிரபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *